Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் விழிபிதுங்கும் தேர்தல் பிஸினஸ்; தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோர்!

388

தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி தொடங்கி விட்டன. இதற்காக இந்தியாவின் தேர்தல் வித்தகர், கார்ப்பரேட் ஜாம்பவான் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவர் ஐபேக் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதன்மூலம் பல்வேறு மாநிலங்கள், ஏராளமான அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு உழைத்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற பிரசாந்த் கிஷோர் காரணமாக இருந்தார். இதையடுத்து நிதிஷ்குமார், ராகுல் காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருக்கு வேலை செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலுக்கு பின், மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார். இந்த மாநிலத்தில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக ஐபேக் டீமுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்திலும் சில அரசியல் கட்சிகள் பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியுள்ளன. முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கமல் ஹாசன் ஒப்பந்தம் போட்டார்.

Also Read: குஜால் மூடில் அன்புமணி ராமதாஸ்! எதற்காகத் தெரியுமா?

இதன் பலனாக 2019 மக்களவை தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று, தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்கும் பிரசாந்த் கிஷோரின் உதவியை கமல் ஹாசன் நாடியுள்ளார். இந்த சூழலில் முதலமைச்சர் பழனிசாமி அதிமுகவின் வெற்றிக்காக ஐபேக் டீமை அணுகியுள்ளார்.