Take a fresh look at your lifestyle.

சிவாண்ணாவால் இப்படம் சாத்தியமாகியது. வாழ் இயக்குனர் நெகிழ்ச்சி!

306

தமிழ் சினிமாவில் அனைவரது கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றப் படம் அருவி.’ அதன் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த அதிரடி ‘வாழ்.’ திரைப்படம் இப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் என்பது பலர் அறிந்திருக்க வாய்பில்லை.
இசையும் பயணமும் இழைந்தோடும் கதை வாழ்! என் நண்பர் ஒருவர் சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்றார். அவர் கேரக்டரை மனசுல வெச்சுதான் கதை உருவாச்சு. ‘அருவி’யில் இருந்த ஒரு சீரியஸ் மூடு இதுல இருக்காது. ஒரு மகிழ்வான ஃபேமிலி எண்டர்டெயினரா இது இருக்கும். ‘அருவி’யில் நடிச்ச பிரதீப்பைத் தவிர மத்த எல்லாருமே இதில் புதுமுகங்கள்தான். ‘அருவி’ ஒளிப்பதிவாளர் ஷெல்லியும், எடிட்டர் ரேமண்ட்டும் இதிலும் இருக்காங்க. ஒரே ஒரு ஃபைட்டை திலீப் சுப்பராயன் மாஸ்டர் செய்திருக்கார். பிரதீப்குமார் இசையமைச்சிருக்கார். இது பயணம் தொடர்பான கதைங்கிறதால, இசைக்கு முக்கியப் பங்கு இருக்கு. இசையமைச்சிருக்கும் பிரதீப் என் நண்பர்ங்கிறதால ஸ்கிரிப்ட் எழுதும் போதே, இசை மூலமா இந்தக் கதையைக் கடத்தணும்னு விரும்பினோம். பாடல் கம்போஸிங்கையும், பின்னணி இசையையும் முடிச்ச பிறகே ஷூட் கிளம்பினோம். ஒரு பாடலை தேவா சார் பாடியிருக்கார்.’’

2010லேயே சிவாண்ணாவுக்கு இந்தக் கதை தெரியும். இதுக்காக நாங்க ப்ரீ புரொடக்‌ஷன் வரைக்குமே ஒர்க் பண்ணிட்டிருக்கற விஷயமும் தெரியும். ஆனா, இந்தப் படம் நடக்காம ‘அருவி’ பண்ண வேண்டியதாகிடுச்சு. இதற்கிடையே எங்காவது சிவாண்ணாவைச் சந்திக்கும் போதெல்லாம், ‘என்னப்பா, ‘வாழ்’ எப்போ பண்ணப்போறீங்க?’ன்னு அக்கறையா விசாரிப்பார். ‘அருவி’ முடிச்சதுக்குப் பிறகு, ‘நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை அப்படியே எடுங்க’ன்னு சொல்லி, தயாரிப்பாளரா அவரும் கலையரசண்ணாவும் முழுச் சுதந்திரம் கொடுத்தாங்க. சினிமாவோட சின்னச் சின்ன நுணுக்கங்களையும் ஆடியன்ஸ் பல்ஸையும் சிவாண்ணா நல்லா புரிஞ்சுவெச்சிருக்கார். புதுமுகங்கள் நடிக்கிற படத்தை 171 லொகேஷன்கள்ல ஷூட் பண்ணியிருக்கோம்னா, அவராலதான் சாத்தியமாச்சு.’’
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் என்றது ஒரு பெரிய பேனர் வேல்யூ கிடைச்சுடுச்சு.

கொரோனா அச்சுறுத்தலால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக, ஓடிடியில் ‘வாழ்’ வெளியாகவுள்ளது. சோனி லைவ் நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையை வாங்கியுள்ளது. வரும் ஜுலை 16ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் உலகம் முழுக்க ரிலீசாக உள்ளது என்கிறார் இயக்குனர் அருண் புருஷோத்தமன்.