Take a fresh look at your lifestyle.

Asvins Movie Review – Cinema5D

157

அஸ்வின்ஸ் திரைவிமர்சனம்:

வசந்த் ரவி, விமலா ராமன், சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்கியிருக்கிறார் தருண் தேஜா.

கதைக்கரு:

இப்படத்தின் லண்டனில் உள்ள ஒரு மேன்ஷனில் விமலா ராமன் 15 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் யாருடைய உடலும் கிடைக்காமல் மர்மமாக இருக்கிறது.  இந்த சம்பவத்தை டாக்குமென்டரி செய்வதற்காக வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அங்கே சென்றவர்கள் உண்மையை கண்டறிதர்களா !  இவர்களுக்கு என்ன நடந்தது! என்பதே படத்தின் மீதி கதை.

தமிழ் சினிமாவில் எப்போவாவதுதான் இப்படி போன்ற மிரட்டலான படங்கள் வருகிறது. அதுவும் ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம். புதுமுக இயக்குனர் தருண் தேஜா முதல் பாலே சிக்ஸ் அடித்திருக்கிறார். படத்தை பார்ப்பவர்கள் பயப்படாமல் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு சவுண்ட் எபெக்ட், விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கின்றனர் படக்குழுவினர்.

படத்தில் மிக குறைந்த கதாபாத்திரங்களே நடித்திருந்தாலும் ஒவ்வொருவரும் அசத்தியிருக்கின்றனர். அதிலும் விமலா ராமன் ஒரு காட்சியில் மிரள வைத்திருக்கிறார். மேலும் வசந்த் ரவி நல்ல கதைககளை தேர்ந்தெடுக்கிறாரா, இல்லை நல்ல கதைகள் அவரிடம் வந்து சேர்கின்றனவா தெரியவில்லை நடிப்பில் பிண்ணியிருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருப்பது பின்னணி இசையும் விஷுவல் எபக்ட்டும்.

மொத்தத்தில் ‘ASVINS’ மிரட்டல்.