Pizza – 3 திரைவிமர்சனம்
கதைக்கரு:
இப்படத்தில் நாயகன் அஸ்வின், நாயகி பவித்ரா மாரிமுத்து, அனுபமா குமார் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இசை அருண் ராஜ், இயக்கியிருக்கிறார் மோகன் கோவிந்த்.
சென்னையில் புதிதாக ஒரு உணவகத்தை தொடங்குகிறார் படத்தின் நாயகன் அஸ்வின். நாயகியாக வரும் பவித்ரா மாரிமுத்து பேய்களிடம் பேசும் ஒரு ஆப் ஒன்றை தயாரித்து வருகிறார். அஸ்வின் கடைக்கு வாடிக்கையாளர் ஒருவர் மம்மி பொம்மையை விட்டுவிட்டு செல்கிறார். அதன் பிறகு பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதிலிருந்து நாயகன் தப்பித்தாரா! காதலியை கரம் பிடித்தாரா! எதற்காக அந்த பொம்மை கடைக்கு வந்தது என்பதே படத்தின் மீதி கதை.
இப்படம் வழக்கமான பேய் படங்களில் பயன்படுத்தப்படும் பழிவாங்கல் பாணியையே பயன்படுத்தியிருக்கின்றனர். திரைக்கதையின் சுவாரசியம் திகில் அனிமேஷன் காட்சிகள் புதுமை படுத்தியிருந்தாலும் பார்ப்பவர்களுக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கும் ஆனால் அப்படி ஒன்றும் தோன்றவில்லை.
படத்தில் ஒரு சில கதாபாத்திரங்களான காளி வெங்கட், அம்மாவாக நடித்திருக்கும்
அனுபமா, நாயகன் அஸ்வின் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். மற்றபடி திகில் திரைப்படங்களில் வரும் விறுவிறுப்பு, பயமுறுத்தல் சற்று தொய்வை ஏற்படுத்துவதால் ஆடியன்ஸுக்கு திருப்தி ஏற்படவில்லை. படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் ஓரளவுக்கு சொல்லும்படியாக உள்ளது.
மொத்தத்தில் ‘ Pizza 3 – The Mummy ‘ மிகவும் பழமையானது.