Take a fresh look at your lifestyle.

Sila Nodigalil Movie Review I Wikki Talks

177

சில நொடிகளில் திரைவிமர்சனம் :

கதைக்கரு:

படத்தின் நாயகன் Richard மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி Punnagai Poo Geetha இருந்தும், Yashika Aanand உடன் கள்ள தொடர்பில் இருக்கிறார். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லாத நாளில் Yashika ஐ வீட்டுக்கு வரவைக்கிறார். அதே நேரத்தில் அவரின் மனைவி வீட்டுக்கு வருவதாக சொல்ல உடனே Yashika ஐ அனுப்புகிறார். எதிர்பாராத விதமாக Yashika உயிரிழந்த நிலையில், மனைவிக்கு தெரியாமல் அப்புறப்படுத்துகிறார். Yashika எப்படி இறந்தார் ? Richard மனைவியிடம் மாட்டிக்கொண்டாரா? இல்லையா. என்பதே படத்தின் மீதி கதை.

இப்படத்தை திரில்லர் மற்றும் பல திருப்பங்களுடன் திரைக்கதை மூலம் சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் Vinay Bharadwaj,  பெரிதாக எந்த இடத்திலும் அப்படிப்பட்ட ஆர்வத்தையும், வேகத்தையும் தரவில்லை.

நடிகர்களின் நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள் அவ்வளவாக பொருந்தவில்லை. ஆறுதலாக புன்னகை பூ கீதா. இவரே இப்படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பாளர். ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் அசத்தலாகவே இருந்தது.

மொத்தத்தில் ‘ சில நொடிகளில் ‘ வேகம் குறைவு.