Take a fresh look at your lifestyle.

Bayamariya Brammai Review 2.5/5

309

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலியின் இயக்கத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரீஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் “பயமறியா பிரம்மை”.

பல கொலைகளை செய்து சிறைதண்டனை அனுபவித்து வருபவர் தான் ஜெகதீஷ். தான் கொலைகளை ஒரு கலையாக செய்ததாக கூறுகிறார் ஜெகதீஷ். எதனால் இவ்வளவு கொலைகள் செய்தார், என்று அறிந்து அதை புத்தகமாக வெளியிட நினைக்கிறார் எழுத்தாளர் வினோத் சாகர்.

அதற்காக ஜெகதீஷை சிறைச்சாலையில் சந்திக்கிறார் வினோத் சாகர். தான் செய்த கொலைகளை கலையாக நினைத்து செய்ததாக கூறுகிறார் ஜெகதீஷ்.

ஜெகதீஷுக்கு இவ்வளவு கொலை செய்யும் மனப்பான்மை எப்படி வந்தது.? ஜெகதீஷின் வாழ்க்கையை வினோத் சாகர் எப்படி புரிந்து கொள்கிறார் என்பதே படத்தின் மீதிக் கதை.

திரைக்கதையில் இன்னும் பெரிதாகவே மெனக்கெடல் செய்திருக்கலாம்.. சாதாரண ரசிகனும் படத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதையை நகர்த்தியிருந்திருக்கலாம்.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே ஓகே ரகமாக கடந்து செல்ல முடிகிறது. நடித்த நடிகர்கள் தங்களது கேரக்டர்களை புரிந்து கொண்டு நடித்திருக்கிறார்கள்.