வடக்கன் பெயர், சென்சார் தடையால் மாற்றப்பட்டு, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பரவலான கவனம் பெற்ற, திரைப்படம் ரயில்.
பெரு முதலாளிகள் சாதி, மதங்களைக் கடந்து, சுயநலத்துக்காக எப்போதும் கைக்கோர்த்துக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால். உழைக்கும் மக்கள் எப்போதும் தங்களுக்குள் பகைமை பாராட்டி, அடிப்படைவாதிகளால் அடித்துக்கொள்ளத் தூண்டப்படுகிறார்கள் என்ற கருத்தை மிகவும் அழுத்தமான திரைக்கதையில் ரயில் திரைப்படம் வெளியாகி இருந்தது.
உழைக்கும் தமிழர்கள் குடிநோய்க்கு அடிமையான நிலையில், அவர்களின் வேலை வாய்ப்புகள் பரிக்கப்பட்டு, அந்த இடத்தில் வடநாட்டு கூலிகளை அனுமதிக்கும் தமிழ்நாட்டுச் சூழல் ஒருபக்கம் என்றால், அடையாள அரசியல்வாதிகளின் காட்டமான எதிர்வினை இன்னொரு பக்கம் என அனைத்தையும் கடந்து, ரயில் திரைப்படம், பொதுமக்களாலும் ஊடகங்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையம் ரயில் திரைப்படக் குழுவிற்கு பாராட்டு விழா நடத்தி வரவேற்றது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், ரயில் திரைப்படம் ஆஹா ஓடிடி யில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் வெளியாகிறது.
திரையரங்குகளில் வெளியான நீளத்திலிருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, ஏற்கனவே பார்த்தவர்கள் கூட மீண்டும் பார்க்கத் தூண்டும் விதத்தில் படம் வெளியாகிறது என்று திரைப்படக்குழு தெரிவித்துள்ளது.
தயாரிப்பு – மு. வேடியப்பன்
எழுத்து இயக்கம் – பாஸ்கர் சக்தி
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
இசை -எஸ். ஜே. ஜனனி
எடிட்டிங் -நாகூரான் ராமச்சந்திரன்
பாடல்கள் – ரமேஷ் வைத்யா.
நடிகர்கள்
குங்குமராஜ்
வைரமாலா
பர்வேஸ் மெஹ்ரூ
செந்தில் கோச்சடை