தலைக்கூத்தல் திரை விமர்சனம்:
கதைக்கரு:
படத்தில் கோமா நிலையில் படுக்கையில் இருக்கும் தன் தந்தை கண்டிப்பாக ஒரு நாள் கண் விழிப்பார், என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவரைக் கண்போல் காத்துப் பராமரிக்கிறார் மகன் சமுத்திரக்கனி. ஆனால், அவரது குடும்பத்தினர் பழனியின் செயலை கண்டிக்கின்றனர். தனது தந்தையை தலைக்கூத்தல் முறையில் கருணை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். பழனி என்ன முடிவு எடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை.
படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலான இடங்களில் வசனங்கள் குறைவாகவும் தங்களின் உள்ளுணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கின்றனர். சமுத்திரக்கனியின் நடிப்பு அருமை மற்ற நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருந்தியிருக்கின்றனர்.
தலைக்கூத்தல் ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மொத்தத்தில் “தலைக்கூத்தல்” அப்பா மகன் உறவு பின்னிப்பிணைந்து.