Paani Poori Review – Cinema5D

பானி பூரி திரைவிமர்சனம் 

இப்படத்தின் நாயகனாக வரும் லிங்கா இவரை செல்லமாக பானி என்று அழைக்கிறார் நாயகி சாம்பிகா. படத்தில் நாயகியாக பூர்ணிமா என்ற பூரி. படத்தின் தலைப்பாக பானி பூரி என்று வைத்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.

கதைக்கரு:

இக்கதையில் நாயகனாக லிங்கா, நாயகியாக சாம்பிகா இருவரும் காதலிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டையில் முடிகிறது. நாயகியின் தந்தையான குமரவேல் இருவரும் லிவிங் டு கெதெரில் ஒரு வார காலம் இருங்கள் என்று ஐடியா கொடுக்கிறார். ஒரு வாரம் லிவிங் டு கெதெரில் இருக்கும் நயங்கன் நாயகி தங்களுக்குள் புரிதல் ஏற்பட்டதா! வாழ்க்கையின் உண்மையான நிலையை உணர்ந்தங்களா! இல்லையா என்பதே மீதி கதை!

 

இயக்குனர் தான் சந்தித்த மனிதர்கள் பழகிய சூழ்நிலை போன்றவைகளை வைத்து கதையை உருவாக்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. மிகக்குறைந்த நடிகர்களை வைத்து அழுத்தமான காதலன் காதலி புரிதலை சொல்ல முயன்றிருக்கிறார். நடிகர்கள் தேர்வு அற்புதம். குறிப்பாக நாயகன் லிங்கா மற்றும் சாம்பிகா பொருத்தமான தேர்வு. மற்ற கதாபாத்திரங்களான அண்ணியாக வரும் கன்னிகா, வினோத், மற்றும் அண்ணனாக வரும் தயாள் போன்றோர் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றனர். நாயகிக்கு தந்தையாக வரும் குமரவேல் நவீன உலகில் ஒரு யதார்த்தமான தந்தையாக அசத்தியிருக்கிறார். படத்தின் திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. பொதுவாக வெபசீரிஸ் என்றாலே ஒரு எபிசோடு முடிந்ததும் அடுத்த தொடக்கத்திற்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இதில் அப்படி ஓன்றும் பெரிய சுவாரஸ்யமான காட்சியமைப்புகள் சரியாக அமையவில்லை, இருந்தாலும் பாலாஜி வேணுகோபால் குறைந்த பட்ஜெட்டில் தான் சொல்ல வேண்டியதை முழுமையாக முயற்சித்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘பானி பூரி’ காரசாரமின்றி

 

Comments (0)
Add Comment