பாட்டல் ராதா – விமர்சனம் 3/5

யக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், பாரி இளவழகன், ஆண்டனி, அபி ராமையா, வசந்த் மாரிமுத்து, ஜெய பெருமாள், ஆறுமுகவேல், J.P. குமார்,மாலதி அசோக் நவீன், சுஹாசினி சஞ்சீவ், அனீஷா, சாய் சரண், கருணா பிரசாத், சேகர், செந்தில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பாட்டில் ராதா.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரூபேஷ் ஷாஜி செய்திருக்கிறார். ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தொகுப்பு இ. சங்கத்தமிழன் கவனித்திருக்கிறார். தயாரிப்பு: பா. இரஞ்சித் மற்றும் T.N. அருண்பாலாஜி

கதைக்குள் பயணிக்கலாம்…

கொத்தனார் வேலை செய்துவரும் நாயகன் குரு சோமசுந்தரத்தரம் ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவரது மனைவியாக சஞ்சனா வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.

தினசரி வேலைக்கு சென்றால் மட்டுமே இவர்களின் பசியை போக்க முடியும் என்ற சூழலில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அருகில் இருப்பவர்களுடன் குடிப்பழக்கம் குரு சோமசுந்தரத்தை தொற்றிக் கொள்ள, விடாது கருப்பு போன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார் குரு சோமசுந்தரம்.

அப்பழக்கத்திற்கு அடிமையானதால், வீட்டில் தினசரி சண்டை வர, நிம்மதி இழக்கிறது குடும்பம். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டு தரும் மறுவாழ்வு மையம் ஒன்றில் தனது கணவர் குரு சோமசுந்தரத்தை சேர்த்து விடுகிறார் சஞ்சனா.

சிறை போன்று அங்கு அகப்பட்டுக்கொள்ளும் குரு சோமசுந்தரம், குடிக்காமல் அங்கு அவரால் இருக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு, உடன் இருவருடன் இணைந்து அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.

அதன்பிறகு குரு சோம்சுந்தரம் வாழ்க்கையில் என்ன நடந்தது.? சஞ்சனா என்ன முடிவெடுத்தார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

தான் ஒரு மேடை நாடக நடிகர் என்பதால், தனது கேரக்டரை நன்றாகவே உள்வாங்கி அக்கதாபாத்திரமாகவே மாறி, அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் குரு சோமசுந்தரம். ஒரு குடிகாரன் என்ன மாதிரியான உடல் மொழியை பயன்படுத்துவான் என்பதை நன்கு அறிந்து மிகவும் இயல்பான ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்து அக்கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.

குடியை மறந்து தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது அன்பை வெளிப்படுத்தும் இடத்தில் நன்றாகவே தனது நடிப்பின் உச்சத்தை கொடுத்திருக்கிறார்.

மேலும், இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் விஜய்யின் நடிப்பிற்கு எழுந்து நின்று கைதட்டலாம். இதுவரை, இப்படியான நடிப்பை எந்த படத்திலும் இவர் கொடுத்ததில்லை என்றே கூறலாம்.

நாயகி சஞ்சனா, ஒரு எளிய குடும்ப பெண்ணாக நடித்து அனைவரின் மனதிலும் அழுத்தமாக பதிந்து சென்றிருக்கிறார்.

மாறனின் டைமிங் காமெடி படத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

ஒரு சிறு கதை தான், அதை சற்று இழுத்துக் கொண்டு சென்றது கொஞ்சம் நெருடல் என்றாலும், எடுத்த நோக்கத்திற்காக இயக்குனரை வெகுவாக பாராட்டலாம்.

தமிழகத்தில் குடியால் குடும்பங்கள் படும் இன்னல்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர். இப்படத்திற்கு பின் ஒருவர் குடியை மறந்து குடும்பத்தை பார்த்துக் கொண்டு வாழ்ந்தால் அதுவே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடலாம்..

இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பலம் தான்.

பாட்டல் ராதா – பார்த்து திருந்தலாம்…

bottle radha review
Comments (0)
Add Comment