கதைக்கரு:
படத்தில் நாயகியான அன்விதா ( அனுஷ்கா )சமையல் கலைஞர். தன் அம்மாவுடன் லண்டனில் வசித்து வருகிறார். தாயும் உடல்நல குறைவு ஏற்பட்டு இறக்கிறார். இதனால் மனமுடைந்த அன்விதா, தாயின் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான திருமண வாழ்க்கையை வெறுக்கிறார். எனவே திருமணம் ஆகாமல் செயற்கை கருவுதல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள, தன்னைவிட வயது குறைந்த சித்து ( நவீன் ) தேர்ந்தெடுக்கிறார். நாயகன் சித்து இது தெரியாமல், உண்மையாக காதலிக்க பின்பு எல்லாம் தெரிந்த பின்பு நாயகியை விட்டு பிரிகிறார்.
இறுதியில் அன்விதா கருவுற்றாரா ? காதல் கைகூடியதா ? என்பதே படத்தின் மீதி கதை.
அனுஷ்கா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஒரு நல்ல கம் பேக் கொடுத்து அசத்தியிருக்கிறார். தன்னுடைய தேர்ந்த நடிப்பால் ஒவ்வொரு காட்சியிலும் நம்மை வசீகரிக்கிறார். நாயகன் சித்து துருதுவென தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கவர்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் அசத்தியிருக்கின்றனர்.
காதல் ரொமான்டிக் கதைக்களத்தை கொண்டு ஒரு அழகான திரைக்கதையை உருவாக்கி வெற்றிபெற்றுருக்கிறார் இயக்குனர் மகேஷ் பாபு.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அற்புதம்.
மொத்தத்தில் ‘ Miss. Shetty Mr. Polishetty ‘அழகு.