கதைக்கரு:
படத்தின் கதையின் நகையகனாக வரும் ஜோஷி. கார் கம்பெனியில் வேலை செய்கிறார். அஜாக்கிரதையாக காரை முழுவதுமாக சரி செய்யாமல் டெலிவரி செய்கிறார். போகும் வழியிலேயே விபத்து ஏற்படுகிறது.
இந்த குற்ற உணர்ச்சியில் இருக்கும் இவர். அமானுஷ்யம் போன்ற விஷயத்தில் ஆர்வம் அதிகம். எனவே இதற்கான படிப்பை படிக்க தொடங்குகிறார். இதனிடையே தன்னுடைய காதலியுடன் பேய் இருப்பதாக சொல்லும் ஒரு வீட்டிற்கு செல்கிறார். அங்கு இருவரும் மாட்டிக்கொள்கின்றனர்.
இறுதியில் அங்கிருந்து தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதி கதை.
படத்தின் திரைக்கதை மிகவும் மெதுவாக செல்வதால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைகிறது. பல இடங்களில் நம்மை பயமுறுத்த நினைத்து ஒரு இடத்தில் கூட பலிக்கவில்லை.
மற்றபடி பின்னணி இசையும் எங்கோ கேட்டதுபோல் தோன்றியது. கதாபாத்திரங்களும் வலிமை இல்லாத காரணத்தால் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் ‘ Striker ‘ சுமார் ரகம்.