‘Thugs’ திரை விமர்சனம் I Cinema5D

‘Thugs’ திரை விமர்சனம் :

 

 

கதைச்சுருக்கம்:

 

இப்படம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நடப்பதை போன்று கதை நகர்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் கதாநாயகன் Hridhu Haroon  கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறைக்கு செல்கிறார். நாயகன் எதற்காக சிறை செல்கிறார், பின்பு அங்குள்ள மற்ற கைதிகளுடன் சேர்ந்து தப்பிக்க நினைக்கிறார். இறுதியில் தப்பித்தார்களா! இல்லையா! என்பதே படத்தின் மீதி கதை.

இந்த படம் Action, Thriller ஆக உருவாக்கப்பட்டிருக்கிறது.  திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்தாமல், இருக்கையின் நுனியில் நம்மை கட்டிப்போட்டிருக்கிறது. இயக்குனர் பிருந்தா அவர்கள் தனது முந்தைய படமான Hey Sinamika,  காதலை அழகாக உணர்வுபூர்வமாக எடுத்து வெற்றியை பெற்றார். இப்படம் அதற்கு நேர் எதிராக Action ல் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.

படத்திற்கு மிக பெரிய பலம் Sam CS ன் பின்னணி இசையும்,  ஒளிப்பதிவும். படத்தின் Hero Hridhu Haroon அவருடைய முழு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். கூடுதல் பலமாக Bobby Simha, Munishkanth போன்றோர் அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கின்றனர்.

மொத்தத்தில் ‘Thugs’ அமர்க்களம்.

bobby simhabrinda masterbrinda thugssimhathugsthugs moviethugs movie reviewthugs new moviethugs public reviewthugs songsthugs thirai vimarsanam
Comments (0)
Add Comment