Vaan Moondru Thiraivimarsanam – Wikki Talks

வான் மூன்று திரைவிமர்சனம்:

 

படத்தின் கதைக்கரு:

கதை – 1

நாயகன் சுஜித்,  நாயகி சுவாதி  இருவரும் காதல் தோல்வியுற்ற காரணத்தால் தற்கொலைக்கு முயன்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகின்றனர். எதிரெதிரே அமைந்துள்ள படுக்கை என்பதால், இருவருக்கும் காதல் மலர்கிறது. இவர்கள் இறுதியில் இணைந்தார்களா ! இல்லையா! என்பதே படத்தின் மீதி கதை.

கதை – 2

நாயகன் ஜோஷ்வா,  நாயகி ஜோதி  இருவரின் காதலை மதத்தை காரணம் காட்டி நாயகியின் பெற்றோர் சம்மதிக்காததால், வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இதனிடையே நாயகிக்கு மூளையில் பாதிப்பு ஏற்படவே மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். நாயகி ஜோதி  நோயிலிருந்து குணமடைந்தாரா! பெற்றோருடன் இணைந்தாரா! என்பதே படத்தின் மீதி கதை.

கதை – 3

வயதான தம்பதிகளாக வரும் சிவம், சித்ரா  சந்தோஷமாக வாழ்கின்றனர். படத்தில் பாட்டியாக வரும் சித்ரா,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிள்ளைகள் சரியில்லாத காரணத்தால் ஆபரேஷன் செய்ய பணத்தை தேடி அலைகிறார் சிவம். இந்த அன்பான தம்பதிக்கு பணம் கிடைத்ததா! அவர் நலமாகி வீடு திரும்பினாரா! என்பதே படத்தின் மீதி கதை.

 

படத்தின் இயக்குனர் முருகேஷ். மூன்று விதமான காதல் கதைகளை சொல்ல முயன்றிருக்கிறார். மூன்று கதைகளையும் ஒவ்வொரு மையத்திலும் இணைக்க முயன்று சற்று தடுமாறியிருக்கிறார். ஒவொருவரின் வாழ்க்கை முறையின் பின்னணியை தெளிவாக சொல்லவில்லை. படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓரளவுக்கு OK ரகம். டெல்லி கணேஷ், லீலா அவர்களின் நடிப்பு அற்புதம்.

மொத்தத்தில் ‘வான் மூன்று’ தெளிவில்லாமல்.

vaan moondruvaan moondru cast and crewvaan moondru movievaan moondru reviewvaan moondru thiraivimarsanamvaan moondru vimarsanam
Comments (0)
Add Comment