Take a fresh look at your lifestyle.

CHICKLET MOVIE REVIEW:

97

மஞ்சிரா, நயன் கரிஷ்மா, அம்ரிதா, ஹால்டார் ஆகியோர் சிறு வயது முதலே ஒன்றாக படித்த பள்ளி தோழிகள். பள்ளி படிப்பை முடித்ததும் உயர்கல்விக்கு தயாராகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வயது கோளாறு காரணமாக காதல் டேட்டிங் என தனக்கு பிடித்த மாணவர்களுடன் சுற்றித் திரிகின்றனர்.

ஆனால், இந்த விஷயம் அவர்களின் பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர். ஒரு நாள் பார்ட்டியில் பங்குபெறுவதற்காக தங்கள் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு காரில் செல்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களது விவகாரம் பெற்றோருக்கு தெரிய வருகிறது.

இறுதியில் உண்மை தெரிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

வயது கோளாறால் திசைமாறும் வாழ்க்கையில் சிக்கும் கதாபாத்திரத்தில் மூன்று பெண்களும் கதாபாத்திரமாக வாழ்ந்தது மட்டுமின்றி இரட்டை அர்த்தங்கள், கவர்ச்சி என அசத்தியுள்ளனர்.

தனது பிள்ளைகள் திசை மாறி செல்வதை அறிந்து அவர்களை திருத்த நினைக்கும் பெற்றோர்களாக சுரேகாவானி, ஸ்ரீமன் ராஜகோபால் ஆகியோரின் நடிப்பு சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. மூன்று பெண்களின் காதலர்களாக நடித்துள்ள சாத்விக், ஜாக் ராபின்சன் ஆகியோர் இளம் பெண்களுடன் நடத்தும் ரொமான்ஸ் இளைஞர்களுக்கு தரும் மயக்க மருந்து.

வயது கோளாறில் காதலிலும் காமத்திலும் சிக்கி வாழ்க்கை சீரழிந்து விடாமல் அதை கடந்து செல்லும் விழிப்புணர்வாக இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் முத்து. கவர்ச்சியும் இரட்டை அர்த்தங்களையும் கொஞ்சம் காட்சிகளில் குறைத்து இருக்கலாம்.

பால முரளி இசை படத்திற்கு பலம். கொளஞ்சி குமாரின் கேமரா கதைக்கு ஏற்றபடி ஓடி விளையாடுகிறது. விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு ஓகே.