Take a fresh look at your lifestyle.

சியான் 63

8,675

எங்கள் மூன்றாவது தயாரிப்பை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறோம். கோடிக்கணக்கான மக்களை தனது நடிப்பின் மூலம் மகிழ்வித்து, மறக்க முடியாத கதாபாத்திரங்களையும் முன்னோடியான படங்களையும் வழங்கிய நடிகர் சியான் விக்ரமுடன் கை கோர்ப்பதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம்.
இந்த திரைப்படத்தை மண்டேலா மற்றும் மாவீரன் போன்ற சிறந்த படைப்புக்களை உருவாக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். அவரது தனித்துவமான கதை சொல்லும் திறன் எங்களை மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தூண்டியுள்ளது.
உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உயர்தரமான ஒரு திரைப்படத்தை வழங்கும் உறுதியுடன் நாங்கள் இந்த பயணத்தை தொடங்குகிறோம்.

நன்றியுடன்,
அருண் விஸ்வா
சாந்தி டாக்கீஸ்