Take a fresh look at your lifestyle.

Dr. PC. Jagadeesh & Dr. Sujith Kasiraj Produced the album song “Nee Ennai Nerungaiyile”

26

திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த தென்னிந்திய மக்கள் தற்போது சுயாதீன இசை ஆல்பங்கள் மற்றும் தனிப்பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். அதிலும் மனதை வருடும் இசை, இளசுகளை கவரும் வரிகள், இசை பிரியர்களை கவர்ந்திழுக்கும் காந்தக்குரல் ஆகியவற்றைக் கொண்ட பாடல் என்றால், மக்களை எளிதியில் கவர்ந்துவிடுகிறது. அப்படி ஒரு பாடலாக சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்ஐ பெற்றுள்ளது “நீ என்னை நெருங்கையிலே…” பாடல்

பிக் பாஸ் புகழ் ராணவ், நடிகை பாடினி குமார் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வீடியோ பாடலை, ஓம் ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரா புரொடக்‌ஷன்ஸ் ஹவுஸ் சார்பில் டாக்டர்.பி.சி.ஜெகதீஷ் தயாரித்திருக்கிறார். கேவி. (KVe) வீடியோ கருத்தாக்கம் செய்து இயக்கியிருக்கிறார். யுனிவர்சல் ஸ்க்ரீன்கிராப்ட் இணை தயாரிப்பு பணியை மேற்கொண்டுள்ளது.

ஜெயராஜ் சக்ரவர்த்தி இசையில், பிரபல பாடலாசிரியர் மோகன்ராஜன் வரிகளில், நித்யாஸ்ரீ வெங்கட்ரமணன் குரலில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மைக்கேல் தேவா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

சாதாரண காதல் கதையாக அல்லாமல், பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் இசை உலகில் பிரபலமான ஆல்பமாக திகழ்ந்த யுகம் இப்போது மீண்டும் உயிர்பெற்று வருவது போன்ற உணர்வை கொடுக்கும் இந்த பாடல், கெளதம் மற்றும் குழலி கதாபாத்திரங்களின் உணர்ச்சிப் பயணத்தின் மறுபக்கமாகவும், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடனும் செவிகளுக்கு மட்டும் இன்றி கண்களுக்கும் இனிமை சேர்க்கும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியான சில நாட்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வரும் “நீ என்னை நெருங்கையிலே…” பாடல் இளம் நெஞ்சங்களை கவர்ந்ததோடு மட்டும் அல்லாமல், இசை பிரியர்களையும் கொள்ளை கொண்ட மிகப்பெரிய ஹிட் பாடலாக இசை உலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது.