Take a fresh look at your lifestyle.

ஹரி ஹர வீர மல்லு – விமர்சனம் 3/5

12,425

1600 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கதை நகர்கிறது. அடிமைப்பட்ட ஒரு சமூகத்தில் இருந்து, குழந்தை ஒன்று ஆற்றோடு அடித்துச் செல்ல அதைக் காப்பாற்றுகிறார் சத்யராஜ். இந்து மதத்தின் பெருமையையும் வரலாறையும் போதித்தருளும் குருகுலத்தை நடத்தி வருபவர் தான் சத்யராஜ்.

குழந்தையை தனது மகன் போல் பாவித்து அவரை வளர்க்கிறார். வருடங்கள் உருண்டோட, குழந்தை வளர்ந்து பவன் கல்யாணாக வருகிறார்.

வைரங்களை திருடுவதை தனது தொழிலாக வைத்திருக்கிறார் பவன் கல்யாண். திருட்டு வைரத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு ஏழை மக்களின் பசியாற்ற உதவி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அடுத்தடுத்த, நிலச்சுவந்தார்கள், குறுநில மன்னர்கள் என அனைவரின் கவனத்திற்கும் செல்கிறார்.

முஸ்லீம்களின் ஆதிக்கம் சற்று ஓங்கிக் கொண்டிருந்த வேலை அது. வடக்கே, செங்கோட்டையில் தனி அரசாங்கத்தை நடத்தி, தனது முஸ்லீம் மதத்தை பரப்பிக் கொண்டிருந்தவர் ஒளரங்கசீப்.

இந்து மதத்தினைச் சேர்ந்தவர்களைக் கண்டாலே, அவர்களை தாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தவர் ஒளரங்கசீப்.

ஒளரங்கசீப்பைத் தேடிச் செல்கிறார் ஹரிஹர வீரமல்லு. அவர் ஏன் ஒளரங்கசீப்பைத் தேடிச் செல்ல வேண்டும்.? அதற்குப் பின்னால் இருக்கும் மர்மம் தான் என்ன.? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை வைத்திருக்கிறார்கள் இரண்டாம் பாதியில்.,

வழக்கம் போல் தனது பணியை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்திருக்கிறார் பவன் கல்யாண். மாஸ், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஏரியாவிலும் களம் இறங்கி விளையாடியிருக்கிறார் பவன் கல்யாண்.

காலில் இறக்கைக் கட்டியது போன்று பறந்து கொண்டே இருக்கிறார். அந்த காட்சிகளை மட்டும் சற்று தவிர்த்திருந்திருக்கலாம். ரசிகர்களை அதனை கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை தான்.

ஒளரங்கசீப்பாக பாபி தியோல் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முகலாயப்பேரரசின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஒளரங்கசீப்பின் வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டார் பாபி தியோல்.

படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தோன்றிய நாசர், சுனில், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்திருக்கிறார்கள். நாயகியான நிதி அகர்வால் அவர்களின் நடிப்பு மிகவும் செயற்கைத் தனமாக இருந்தது.

முகலாய பேரரசை எதிர்த்த முதல் இந்திய போராளியாக அனைவராலும் அறியப்பட்ட வீரர் ஹரிஹர வீர மல்லு. அவரின் வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதியை படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஆங்காங்கே சற்று சிஜி பணிகள் தொய்வடைந்தாலும், கதையின் வேகம் அதை பெரிதாக குறை சொல்லும்படியாக இல்லை.

முதல் பாதி சண்டை, ட்விஸ்ட் என சென்று கொண்டிருந்த காட்சியானது, இரண்டாம் பாதியில் ட்ராக் மாறி வேறு ஒரு திசை கொண்டு பயணித்ததால் படம் சற்று தொய்வை சந்தித்து விட்டது.

கீரவாணியின் இசையில், பாடல்கல் ஓகே ரகம் தான். பின்னணி இசையில் எதற்காக இவ்ளோ இரைச்சல் என்று தெரியவில்லை. படம் முழுக்கவே பின்னணி இசையில் அனைத்து கருவியையும் உபயோகித்து காதை கிழிக்க வைத்துவிட்டார் கீரவாணி.

ஒளிப்பதிவு மிகப்பெரும் வேலை செய்திருக்கிறது. படத்தினை சற்று தாங்கி பிடித்திருக்கும் தூணாக ஒளிப்பதிவு இருந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.