கதைக்கரு:
வயதான முதியவர் ஒரு ஒத்தையடி சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார். பின்புறம் ஒரு பழைய மாடல் கார் ஒன்று கர்ப்பிணி பெண்ணுடன் நான்கு இளைஞர்களுடன் பயணிக்கின்றனர். முன்னே பயணிக்கும் முதியவர், இவர்களுக்கு வழிவிடாமல் செல்கிறார். அவர்கள் தொடர்ந்து ஹார்ன் அடித்து கொண்டே செல்கின்றனர்.
முதியவரும் வழிவிடாமல் செல்கிறார். இதனால் இவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு முதியவர் காயமடைகிறார். இவர் ஏன் அப்படி செய்கிறார் ? அவர்களுக்குள் என்ன நடந்தது ? என்பதே படத்தின் மீதி கதை.
மிகவும் குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு இரண்டு மணி நேரம், ஒரே லொகேஷன் ஒரு முதியவர் வைத்துக்கொண்டு திரைக்கதையை அமைத்த இயக்குனர் யாழ் குணசேகரன் பாராட்டுக்கள்.
கதையின் நாயகனாக வரும் கதிரேச குமார் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான வீ ஏ ஓ மற்றும் காரில் பயணிக்கும் நபர்கள் அனைவரும் பொருந்தியிருக்கின்றனர்.
பின்னணி இசை திரைக்கதைக்கு சற்று பலமாக அமைந்திருக்கிறது. படத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், இவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ‘ Kezhapaya ‘ வலிமையோடு.