நாயகன் விஷால் சொந்தமாக கேபிள் டிவி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆர் சுந்தர்ராஜனின் மகனாக வரும் விஷால் தனது நண்பர்கள் மீது அளவு கடந்த நட்பை வைத்திருக்கிறார். சடகோபன் ரமேஷ், நித்தின் சத்தியா மற்றும் சந்தானம் மூவரும் விஷாலுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.
நாயகி அஞ்சலியின் தந்தையான சாமிநாதனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார் விஷால். தொடர்ந்து அவர்களால் ஆபத்து வரும் என்று அறிந்து சாமிநாதன் மற்றும் அஞ்சலி இருவரையும் விஷால் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். விஷாலும் அஞ்சலியும் ஒருவரை ஒருவர் காதலிக்க, இந்த விவகாரம் சுந்தரராஜனுக்கு தெரிய வருகிறது.
இதனால் கோபமடைந்த சுந்தர்ராஜன் அஞ்சலியின் குடும்பத்தை ஊரை விட்டு அனுப்பி விடுகிறார். இந்நிலையில் பள்ளி ஆசிரியர் மகள் திருமணத்தில் தனது பள்ளி நட்புகளான சந்தானம், சடகோபன் ரமேஷ் மற்றும் நித்தின் சத்யா மூவரை சந்திக்க அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையை விஷால் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதை படத்தின் மீதி கதை
உடம்பில் எட்டு அடுக்கு உடலுடன் மிடுக்காக நடித்திருக்கிறார் நாயகன் விஷால். மிகவும் இயல்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது நண்பர்களோடு லூட்டி அடிக்கும் காட்சிகளில் மிகவும் பொருத்தமாக நடித்து காட்சிக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
காதல், நடனம், ஆக்ஷன், சென்டிமென்ட் என பல கோணங்களில் தனது நடிப்பின் திறமையை பல இடங்களில் கொடுத்து மதகஜராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார் விஷால்
நாயகிகளான அஞ்சலி மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் தங்கள் நடிப்பை மிக அழகாக கொடுத்திருக்கின்றனர். கவர்ச்சியை தாராளமாக கொடுத்து இளைஞர்களை கட்டி போட்டுள்ளனர் இருவரும்.
சுவாமிநாதன், லொல்லு சபா மனோகர், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் காமெடி கிங் சந்தானம் இவர்கள் அடிக்கும் காமெடிகள் படத்தினை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது, வழக்கமாக சுந்தர் சி கதையில் இருக்கும் காமெடி களபரங்கள் எல்லாம் இப்படத்திலும் நிறைந்து கிடக்கின்றன.
விஜய் ஆண்டனி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. ரிச்சர்ட் எக் நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் படம் முழுவதும் கலர்ஃபுல்லாவே இருக்கிறது.
எந்த லாஜிக்கும் பார்க்காமல் இரண்டு மணி நேரம் சிரித்து மகிழ தாராளமாக மதகஜராஜா