க்ரியேடிவ் இயக்குனராக விஜயேந்திர பிரசாத் பணிபுரிய தயாரிப்பாளர்களாக அர்ஜுன் அகர்வால் – சிபி கார்த்திக் – தமோட்சு கோசானோ உள்ளிட்டவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அனிமேஷன் திரைப்படம் தான் இந்த ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’.
நிர்வாக தயாரிப்பு : மோக்ஷா மோட்கில்
சீனியர் புலராடியூசர்: ஜானி எமமோட்டோ
பல வருடங்களாக நாம் கேட்டு வரும் ராமாயண கதைகளம் தான் இப்படத்தின் கதையும்.
அதை சுருக்கமாக இப்போது கண்டுவிடலாம்…
அயோத்தியில் அரசராக பதவியேற்க இருந்த ராமர், சூழ்ச்சியின் காரணமாக 14 வருடம் வனவாசம் மேற்கொண்டார். இந்த வனவாசத்தில் அவருடன் மனைவி சீதாவும் சகோதரன் லட்சுமணனும் உடன் இருந்தார்கள்.
ராவணனால் சீதா லங்கைக்கு கடத்தப்படுவது, அனுமனின் உதவியால் லங்கை மீது போர் தொடுத்து ராவணனை வீழ்த்தி சீதாவை ராமன் காப்பாற்றுவது, அங்கு அடிமையாக்கப்பட்டிருந்த மக்களையும் ராமன் காப்பாற்றுவது என ராமாயண கதை தான் இப்படத்தின் கதை.
இப்படத்தில் தமிழ் டப்பிங் மிகவும் நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கேரக்டர்கள் ஒவ்வொன்றையும் தெளிவாகவும் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
சமகால சூழலில் புத்தகங்கள் வாசிப்பதென்பது குறைந்து வரும் நிலையில், இம்மாதிரியான அனிமேஷன் படங்கள் வரும் சமுதாய தலைமுறைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ – காலத்தால் அழிக்க முடியா வரலாறு